எனவே, போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதனால் அந்த பாலத்தை இடித்து விட்டு புதிய மெம்பாலம் கட்ட அமைச்சர் காந்தி முயற்சிகள் மேற்கொண்டார்.
நான்கு ஆண்டுகளுக்கு ‘முன் அவர் எம்எல்ஏ வாக இருந்த சமயத்தில் தொடர் முயற்சி மேற்கொண்டதன் பயனாக ரூ.26.63 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்ட முடிவானது, இந்த பணிகள் கடந்த ஆண்டு துவங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி 19க்குள் பணிகள் முடிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த பணியானது ஆமை வேகத்தில் நடப்பதால் 25 சதவீத பணியே முடிந்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் காந்தி நேற்று இந்த பாலத்தை ஆய்வு செய்தார். மேம்பால சர்வீஸ்லைன் அமைப்பதற்கு அருகில் உள்ள சர்ச்சுக்கு சொந்த மான ஆயிரத்து427 ச.அடி. நிலம் தேவைப்படுகிறது. அதை கையகப்படுத்துவதற்கான ஆய்வு நடந்தது. பின்னர் சர்ச்நிர்வாகத்திடம் துறை சம்பந்தப்பட்ட இடத்தை பொதுமக்கள் பயன்பாட் டுக்காக ஒப்படைக்கும்படியும், அதற்குரிய இழப் பீடு தொகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
பிறகு தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் கான்ட்ராக்டரிடம் பேசிய அமைச்சர் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். திட்டமிட்டபடி விரைவில் பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என்று உத்தர விட்டார்.
ஆய்வின்போது கலெக்டர் பாஸ்கரபாண்டியன், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், ராணிப்பேட்டை நகராட்சி சேர்மன் சுஜாதா வினோத், நெடுஞ்சாலைத் உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.