அனுமன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் இறைவன் இராமனின் பக்தனும், இந்துக்களின் கடவுளும் ஆவார். இராமாயணத்தில் இராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறுகிறார். அனுமனுக்கு மாருதி, ஆஞ்சநேயன் போன்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன.
பொதுவாக செவ்வாய்க் கிழமை (Tuesday) அனுமனுக்கு உகந்த நாள் ஆகும். இந்த நாளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு போட்டு வந்தால் வாழ்க்கை ஒளியும், வளமும் பெருகும் என்பார்கள். அனுமன் (Lord Hanuman) பொதுவாக குங்குமப்பூ நிறத்தில் சித்தரிக்கப்படுவார். ஏன்னென்றால் இந்த சிந்தூர் ஆற்றல் மற்றும் உயிராற்றலின் நிறம். மற்றொன்று, ஒரு நாள் சீதை தன் நெற்றி உச்சியில் சிந்தூரைத் தடவினார். அதைக் கண்ட அனுமன் சீதையிடம் ஏன் என்று கேட்டார். அதற்கு சீதை, இது ராம பிரான் நீண்ட காலம் செழிப்பாக இருக்க அவரை ஆசீவதிக்கும் வகையில் செய்யும் ஓர் செயல் என்று கூறினார். இதைக் கேட்ட அனுமன் உடனே தன் உடல் முழுவதும் இந்த சிந்தூரைத் தடவிக் கொண்டார்.
செவ்வாய் கிழமை அனுமனை வழிபடுவதற்கு ஒரு சிறப்பான காரணம் உள்ளது. இதற்கான காரணம் ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, அனுமான் செவ்வாய்க்கிழமை பிறந்ததால், செவ்வாய் கிழமை அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மத சாஸ்திரங்களின்படி, செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து வழிபடுவதன் மூலம் அனுமன் விரைவில் மகிழ்ச்சி அடைவார். வாழ்வின் எல்லா பிரச்சனைகளையும் நீக்கி விடுகிறார்கள். இந்த நாளில் அனுமன் சாலிசா படிப்பதும், சுந்தரகாண்டம் ஓதுவதும் மிகுந்த பலன் தரும்.
செவ்வாய்க் கிழமைகளில் அனுமனுக்கு எந்த பொருட்களைப் படைத்து வணங்கினால் சிறப்பு:
செவ்வாய் கிழமைகளில் அனுமனுக்கு துளசி மாலையை அணிவித்து வணங்குவது நல்லது. பின் அந்த துளசி இலைகளை சாப்பிடலாம்.
முக்கோண வடிவமுள்ள சிவப்பு கொடியில் ‘ராம்’ என்று எழுதி, அனுமனுக்கு படைத்து வணங்கினால் வீட்டில் பணம் கொழிக்கும்.
அனுமனுக்கு தொடர்ச்சியாக ஆரஞ்சு நிற சிந்தூர் வைத்து வந்தால் மாங்கல்ய தோஷம் நீங்குவதோடு, இதர தோஷங்களும் அகலும்.
செவ்வாய் கிழமைகளில் அனுமனுக்கு லட்டு, சுண்டல், வெல்லம், கொய்யாப்பழம் போன்றவற்றை படைத்து வணங்கினால், அனுமனின் முழு ஆசீர்வாதமும் கிட்டுமாம்.
(குறிப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்கள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் அமைந்தவை)