குழந்தைகளுக்கு தடுப்பூசி என்பது மிக முக்கிய ஒன்றாகும். பல பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் அச்சத்துடன் இருக்கிறார்கள். ஆனால் அதில் உள்ள நன்மைகளை பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை.எல்லா தடுப்பூசிகளும் ஒரு சில பக்க விளைவுகளை கொண்டு இருக்கும். அந்த ஆபத்துகளை தெரிந்து அதை எதிர்கொள்ள மக்கள் முன்வரவில்லை.
அதாவது தடுப்பூசிகள் போட்ட உடன் சிவப்பு நிறமாக மாறுவது, வியர்வை வருவது, காய்ச்சல், மற்றும் காயங்கள் போன்றவை ஏற்படுவது சாதாரண ஒன்று தான். சில ஆபத்தான நோய்களை ஒப்பிடும் போது இந்த விளைவுகள் ஒன்றும் பெரிதாக குழந்தைகளை பாதிக்காது.
நோய் எதிர்ப்பு மண்டலம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது எனவே சற்று தாமதமாக தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம் அல்லது முக்கியமான தடுப்பூசிகள் மட்டும் போட்டுக் கொள்ளலாம் என்று சில பெற்றோர்கள் கருதுகிறார்கள்.
குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள் குறைந்தது 3 மாத காலத்திற்குள் போடப்படமால் விட்டால் குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் வலிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
தடுப்பூசிகளில் தண்ணீர் மற்றும் ஆன்டிஜென்கள் தான் இருக்கும். தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்க அதில் கூடுதல் பொருட்கள் தேவைப்படுகின்றன.
தடுப்பூசி பயன்கள்:
தடுப்பூசிகள் உண்மையில் வேலை செய்யாது என்று சில பெற்றோர்கள் கூறிக்ககொண்டு தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது இல்லை. ஆனால் நீங்கள் கவனித்து பார்த்தால் தெரியும் உங்கள் குழந்தைகள் எத்தனை முறை அந்த ஆண்டு பாக்டீரியாக்கள் மற்றும் நோய்களினால் பாதிக்கப் பட்டார்கள் என்று அறிவீர்கள்
தடுப்பூசி போடும் போது புண்கள் ஏற்படத்தான் செய்யும். ஆனால் இவை விரைவில் ஆறிவிடும். இந்த புண்கள் ஒன்றும் மிக ஆபத்தானவை இல்லை. அப்படி இந்த புண்களினால் ஆபத்து என்றால் நீதிமன்றங்கள் இந்த தடுப்பூசி முறையை முன்பே அகற்றி இருப்பார்கள்.
தடுப்பூசி கட்டாயம்:- தடுப்பூசி என்பது கட்டாயமாக்கப்பட ஒன்றாகும். இது உங்கள் குழந்தைகளை பள்ளி அல்லது குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் விடும் போது அவர்களுக்கு நீங்கள் சிறு வயதில் தடுப்பூசி போடாதது குழந்தைகளுக்கு மற்ற சிறுவர்களிடம் இருந்து வியாதிகள் விரைவில் பரவ வாய்ப்புள்ளது. அதாவது அம்மை போன்ற வியாதிகள் விரைவில் குழந்தைகளுக்கு பரவ வாய்ப்புள்ளது.
நீங்கள் தடுப்பூசியால் விளையும் சில பக்க விளைவுகளால் தடுப்பூசி போடாமல் விட்டு விடுகிறர்கள். ஆனால் தடுப்பூசி போடாததால் பின்னர் விளையும் நோய்கள் மிகவும் மோசமானதாக இருக்கும். எனவே அவ்வாறு செய்வதை விட்டுவிட்டு குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி போட வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.