Two person arrested under Gundas law in Arcot

ஆற்காடு, ராமசாமி தெருவைச் சேர்ந்த திருமால் (54).சமையல்காரர்.  கடந்த ஏப்ரல் 22ல் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் செல்வகுமார் (எ) பெட்ரோல் செல்வம் கைது செய்யப்பட்டார்.ஆற்காடு கிளைவ் பஜார், ஏரிக்கரை அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அருண்குமார் (25) என்பவரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

ராணிப்பேட்டை எஸ்பி தீபாசத்யன் பரிந்துரையின் பேரில் இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் காவலில் வைக்க ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டார்.