Training policeman commits suicide by hanging himself from a tree near Toll Gate
ஆற்காடு அடுத்த காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் விக்னேஸ்வரன் (24). காஞ்சிபுரத்தில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் போலீஸ் பயிற்சி பெற்று வந்தார். பின்னர் இவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இதனால் மருத்துவ சிகிச்சை எடுப்பதற்காக விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை பயிற்சிப்பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்ற விக்னேஷ்வரன், அன்று இரவு வாலாஜாபேட்டை டோல் கேட் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
விக்னேஷ்வரன் உடலை மீட்டு பிரேத் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.