நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வகுமார் உத்தரவின் பேரில் உதவி கோட்ட பொறியாளர் பாலாஜி சிங், உதவி பொறியாளர் நிதின் மேற்பார்வையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சாலை பணியாளர்கள் அடங்கிய குழுவினர் போக்குவரத்து கணக்கெடுக்கும் பணியை நேற்று தொடங்கினர்.
விசி மோட்டூர், ஜம்பு குளம் கூட்ரோடு, ராணிப்பேட்டை - ஆற்காடு மேம்பாலம், முத்துக்கடை, கத்தாரிகுப்பம், சோளிங்கர் உள்ளிட்ட 28 இடங்களில் இந்த கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. ஒரு வாரம் நடக்கும் இப் பணியில் எடுக்கப்படும் கணக்கின் அடிப்படையில் ரோடு அகலப்படுத்துதல், மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.