சிறப்பு: வெள்ளிக்கிழமை பிரதோஷம். வெள்ளிக்கிழமை பிரதோஷ நன்னாளில் பிரதோஷ பூஜையை தரிசிப்போம். சுக்கிர யோகம் கிடைக்கப் பெறுவோம் என்பது ஐதீகம்.
வழிபாடு: மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கும் சிவபெருமானுக்கும் அபிஷேகம் செய்து விரதமிருந்து வழிபடுதல்.
வெள்ளிக்கிழமை பிரதோஷ நன்னாளில் பிரதோஷ பூஜையை தரிசித்தால் சுக்கிர யோகம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு கோவில் செல்ல வேண்டும். அப்படி செல்வதால் உறவு வளப்படும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
இன்று வெள்ளி கிழமை பிரதோஷம். வெள்ளி க்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த நாளில் பிரதோஷம் வருவது, கடன், தரித்திரம் முதலான பொருளாதாரச் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் நீக்கும். என்றும் சுக்கிர யோகம் கிடைக்கப் பெறலாம்.
சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் சிவபெருமான் அபிஷேகப் பிரியன். வெள்ளிக் கிழமையில் பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு , லிங்கமே வடிவெனக் கொண்டு காட்சி தரும் சிவனாருக்கு அபிஷேகங்கள் குளிரக்குளிர செய்வது நல்லது.
சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்வோம். சிவனாரையும் நந்திதேவரையும் வணங்குவோம். நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சார்த்துவோம். சிவலிங்கத் திருமேனிக்கு அபிஷேகப் பொருட்கள் வழங்குவோம். வில்வம் சார்த்துவோம். வேண்டியதையெல் லாம் தந்தருள்வார் ஈசன்!