பொதுவாக எல்லோரும் சாமிக்கு உடைக்கும் தேங்காயை பார்த்து பார்த்து கடையில் வாங்குவோம். ஏன் என்றல் சாமிக்கு உடைக்கும் தேங்காய் நல்லதாக இருக்கவேண்டும் என்பதற்காகவே. ஒருவேளை தேங்காய் சரியாக உடையவில்லை என்றாலோ அல்லது அழுகி இருந்தாலோ என்ன அர்த்தம் தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.

தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்? Spoiled Coconut During Pooja In Tamil


தேங்காயில் இருக்கும் மூன்று கண்களில் முதல் கண் பிரம்மன், இரண்டாவது கண் லஷ்மி, மூன்றாவது கண் சிவன் என்பது பொதுவான நம்பிக்கை. இத்தகைய சிறப்பு மிக்க தேங்காயை சுவாமிக்கு உடைக்கும்போது அது அழுகி இருந்தால் அது ஒரு மிக பெரிய அபசகுனம் என்று கருதி மக்கள் வருத்தப்படுவது வழக்கம்.

Azhugiya Thengai


அனால் உண்மை என்னவென்றால் தெய்வத்திற்கு உடைக்கப்பட்ட தேங்காய் அழுகி இருந்தால் அது நன்மையே. இதன் மூலம் தீய சக்திகள், பீடை, கண்திருஷ்டி போன்றவை அகன்று போகும் என்று கூறப்படுகிறது.

தேங்காய் கொப்பரையாக இருந்தால் என்ன அர்த்தம்? If the coconut offered in the worship is spoiled or dry ,is it bad or good


Koparai Thengai


தெய்வத்திற்கு உடைக்கப்பட்ட தேங்காய் கொப்பரையாக இருந்தால் அந்த வீட்டில் ஏதோ சுபகாரியம் நடக்கப்போகிறது என்று அர்த்தம்.

தேங்காயில் பூ இருந்தால் என்ன அர்த்தம்?

Coconut

தெய்வத்திற்கு உடைக்கப்பட்ட தேங்காயில் பூ இருந்தால் அது ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது. மேலும் இதனால் பணவரவு, நல்ல லாபம், எதிர்பாராத நல்ல விஷயங்கள் போன்றவை நடக்கும் என்பது நம்பிக்கை.