Russian President Putin’s ally says ‘Ukraine closed…Poland next’ 


போலந்து நாட்டிற்கு எச்சரிக்கை-செச்சென் குடியரசின் தலைவர் ரம்ஜான் கதிரோவ்

உக்ரைனுக்கு அடுத்தப்படியாக போலந்தை தாக்க திட்டமிட்டு இருப்பதாக ரஷ்ய ஆதரவாளர் மற்றும் செச்சென் குடியரசின் தலைவர் ரம்ஜான் கதிரோவ் எச்சரித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா போரானது கிட்டத்தட்ட மூன்று மாதத்தை நிறைவுச் செய்யவிருக்கும் நிலையில், ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் முக்கிய தலைமை புள்ளியாக இருக்கும் செச்சென் குடியரசின் தலைவர் ரம்ஜான் கதிரோவ் போலந்து நாட்டிற்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.

அதில் உக்ரைனுக்கு அடுத்தப்படியாக போலந்தை தாக்க தான் திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் உக்ரைன் போர் ஏற்கனவே மூடப்பட்ட பிரச்சனை, தற்போது நான் போலந்தின் மீது தாக்குதல் நடத்த ஆர்வமாக இருக்கிறேன்.

உக்ரைனுக்கு தாக்குதலுக்கு பிறகு ஏதேனும் உத்தரவுகள் இருந்தால் 6 வினாடிகளில் எங்களால் என்ன செய்யமுடியும் என்பதை காட்டுவோம் என தெரிவித்துள்ளார்.

அதனால் போலந்தினர் ஆயுதப்படைகளிடம் இருந்து ஆயுதங்களை பெற்று தயாராக இருப்பது சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் போலந்தில் ரஷ்ய தூதர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு போலந்து பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும், அதற்கான விடையை பெறாமல் இதனை நாங்கள் விடுவதாக இல்லை என்பதை மனதில் வைத்துகொள்ளுங்கள் எனவும் ரம்ஜான் கதிரோவ் எச்சரித்துள்ளார்.