ராணிப்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் காரையில் உள்ள பசனை கோவில் தெருவில் வசித்து வருபவர் பன்னீர் செல்வம். இவரது மனைவி குணசுந்தரி. இவர்களுடைய மகன் ரமேஷ் அருகில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ரமேஷின் தலையில் காயம் எற்ப்பட்டு மனநிலை சரியில்லாத நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அன்றிலிருந்து ரமேஷ் அவரது பெற்றோர்களுடன் வசித்து வந்ததாகவும் மனநிலை சரியில்லாததால் பெற்றோருடன் அவ்வப்போது சண்டையிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை ரமேஷ் பெற்றோருடன் சண்டையிட்ட போது மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதை கண்ட பொற்றோர் துக்கம் தாங்க முடியாமல் அவரது வீட்டிலேயே இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.