ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் ரூ.118.4 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்துக்குள் பணிகளை முடிக்க வேண்டு மென அமைச்சர் காந்தி உத்தரவு பிறப்பித்தார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டு மூன்று வருடங்களாகிறது. இந்த மாவட்டத்தை உருவாக்கிய முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி, மாவட்டத்திற்கான அனைத்து துறைகளுக்குமான ஒருங்கிணைந்த பெருந்திட்ட வளாகம் கட்ட ரூ.118.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை ஐவிபிஎம் வளாகத்தில் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தினார்.
இந்நிலையில் கடந்த வருடம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற காந்தி அவ்வப்போது கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
அமைச்சர், கலெக்டர் பாஸ்கரபாண்டியனுடன் சென்று கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். தரைதளத்துடன் கூடிய நான்கு அடுக்கு மாடி கட்டமாக கட்டப்படும் இந்த பெருந்திரள் கட்டடத்தின் 90 சதவீத கட்டு மான பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
தற்போது வெளிப்புற கண்ணாடிகள் பதிக்கும் பணிகள் நடந்துவருகிறது. வளாகத்தின் வெளியே பாதைகள், பூங்காக்கள், நுழைவு வாயில் கட்டும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில் பணிகளை செய்யும் கான்ட்ராக்டர் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் பேசிய அமைச்சர் காந்தி பணியின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். அடுத்த மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க வேண் டும் என்று அவர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப் பன், ராணிப்பேட்டை நகராட்சி சேர்மன் சுஜாதா வினோத், பொதுப்பணித் துறை உதவி இன்ஜினியர் திரிபுரசுந்தரி, பிஎஸ்கே கன்ஸ்ட்ரசன் செல்வம், பொது மேலாளர் கிருபா கரன் மற்றும் இன்ஜினியர்கள் உடன் இருந்தனர்.