குறள் : 766
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு
மு.வ உரை :
வீரம் மானம் சிறந்த வழியில் நடக்கும் நடக்கை தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.
கலைஞர் உரை :
வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும்.
சாலமன் பாப்பையா உரை :
வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசின் நம்பிக்கைக்கு உரியது ஆதல் எனும் நான்கும் படைக்கு காவல் அரண்களாகும்.
Kural 766
Maramaanam Maanta Vazhichchelavu Thetram
Enanaanke Emam Pataikku
Explanation :
Valour honour following in the excellent-footsteps (of its predecessors) and trust-worthiness; these four alone constitute the safeguard of an army.
Horoscope Today: Astrological prediction for May 31, 2022
இன்றைய ராசிப்பலன் - 31.01.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
31-05-2022, வைகாசி 17, செவ்வாய்க்கிழமை, பிரதமை திதி இரவு 07.19 வரை பின்பு வளர்பிறை துதியை. ரோகிணி நட்சத்திரம் பகல் 10.01 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பகல் 10.01 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. முருக வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Nalla neram
மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 31.01.2022 | Today rasi palan - 31.01.2022
மேஷம்
இன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழிலில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலைபளு குறையும். எதிர்பாராத உதவிகளால் அனுகூலங்கள் உண்டாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். செலவுகள் குறைந்து காணப்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தாமதமாக முடிய கூடிய காரியங்கள் கூட எளிதில் முடியும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் நற்பலன் அடையலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படலாம். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.
கடகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் கிட்டும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும்.
சிம்மம்
இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்.
கன்னி
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையாட்களை சற்று அனுசரித்து சென்றால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். வெளி பயணங்களில் கவனமுடன் இருந்தால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய கருவிகள் வாங்குவதற்கான முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
தனுசு
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சிலருக்கு வேலை விஷயமாக வெளிவட்டார நட்பு ஏற்படும். திருமண முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை கொடுக்கும். நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும்.
மகரம்
இன்று வியாபார ரீதியான பேச்சு வார்த்தைகளில் நிதானத்தை கடைப்பிடித்தால் சாதகமான பலனை அடையலாம். புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். செலவுகள் சற்று அதிகரிக்கும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களின் உதவியால் கடன் சுமை ஓரளவு குறையும்.
மீனம்
இன்று உங்களுக்கிருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படாலும் அதன் மூலம் ஆதாயங்களை அடைவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவும் உதவியும் மகிழ்ச்சியை அளிக்கும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001