குறள் : 765

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை

மு.வ உரை :

எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.

கலைஞர் உரை :

உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும்.

சாலமன் பாப்பையா உரை :

எமனே எதிர்த்து வந்தாலும், கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலை உடையதே படை.

Kural 765

Kootrutandru Melvarinum Kooti Edhirnirkum
Aatra Ladhuve Patai

Explanation :

That indeed is an army which is capable of ofering a united resistance even if Yama advances against it with fury.


Horoscope Today: Astrological prediction for May 30, 2022


இன்றைய ராசிப்பலன் - 30.05.2022 | Indraya Rasi Palan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

30-05-2022, வைகாசி 16, திங்கட்கிழமை, அமாவாசை திதி மாலை 05.00 வரை பின்பு வளர்பிறை பிரதமை. கிருத்திகை நட்சத்திரம் காலை 07.12 வரை பின்பு ரோகிணி. மரணயோகம் காலை 07.12 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சர்வ அமாவாசை. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Nalla neram

காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

இன்றைய ராசிப்பலன் - 30.05.2022 | Today rasi palan - 30.05.2022

மேஷம்

இன்று உங்களுக்கு மனநிம்மதி சற்று குறைந்து காணப்படும். வண்டி வாகன பராமரிப்பிற்காக செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல வாய்ப்புகள் உருவாகும்.

ரிஷபம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற அனுகூலங்கள் கிடைக்கும். 

மிதுனம்

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் பிரச்சினைகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். 

கடகம்

இன்று எதிர்பாராத பணவரவுகள் உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். தொழில் சம்பந்தமாக வெளிவட்டார தொடர்பு உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். 

சிம்மம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும்.

கன்னி

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை கூடும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். கடன்கள் குறையும்.

துலாம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வியாபாரத்தில் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

விருச்சிகம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து சந்தோஷம் கூடும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

தனுசு

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம் லாபம் கிட்டும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

மகரம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

கும்பம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. உறவினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். 

மீனம்

இன்று தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். சிலருக்கு உத்தியோக ரீதியாக இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். வீட்டில் பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்கள் வழியில் ஓரளவு அனுகூலங்கள் கிட்டும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001