குறள் : 763

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்

மு.வ உரை :

எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும் பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.

கலைஞர் உரை :

எலிகள் கூடி கடல்போல் முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை :

பாம்பென நிற்கும் சிறுபடை முன் கடல் என வீரர்கள் திரண்டிருந்தாலும், திரண்டவர்கள் மனத்தால் எலியாக இருந்தால் என்ன ஆகும்? பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும்.

Kural 763

Oliththakkaal Ennaam Uvari Elappakai
Naakam Uyirppak Ketum

Explanation :

What if (a host of) hostile rats roar like the sea ? They will perish at the mere breath of the cobra.

Horoscope Today: Astrological prediction for May 28, 2022

இன்றைய ராசிப்பலன் - 28.05.2022 | Indraya Rasi Plan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

28-05-2022, வைகாசி 14, சனிக்கிழமை, திரியோதசி திதி பகல் 01.10 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. பரணி நட்சத்திரம் பின்இரவு 04.39 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. அக்னி நட்சத்திரம் முடிவு இரவு 02.10. 

இராகு காலம் | Indraya Nalla Neram

காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிப்பலன் - 28.05.2022 | Today rasi palan - 28.05.2022


மேஷம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். நினைத்த காரியம் நிறைவேறும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட்டால் சாதகமான பலன்களை அடையலாம். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், மன மகிழ்ச்சியும் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மன நிம்மதி ஏற்படும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

கடகம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். வெளியிலிருந்து வர வேண்டிய பணவரவுகள் தடையின்றி வந்து சேரும். சுபகாரியம் கைகூடும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி

இன்று நீங்கள் உடல் சோர்வுடனும் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும்.

துலாம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். 

தனுசு

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். திடீர் பயணங்களால் அலைச்சல் சோர்வு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.

மகரம்

இன்று உங்களுக்கு வரவிற்கேற்ற செலவுகள் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் நிம்மதி குறைவு ஏற்படும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.

கும்பம்

இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சக நண்பர்களின் அதரவு கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம்

இன்று உத்தியோக ரீதியான பயணங்களால் மனஉளைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனைகளால் தொழில் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001