குறள் : 759

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃதனிற் கூரிய தில்

மு.வ உரை :

ஒருவன் பொருளை ஈட்டவேண்டும் அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.

கலைஞர் உரை :

பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது.

சாலமன் பாப்பையா உரை :

எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை.

Kural 759

Seyka Porulaich Cherunar Serukkarukkum
Eqkadhanir Kooriya Thil

Explanation :

Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it.

Horoscope Today: Astrological prediction for May 24, 2022


இன்றைய ராசிப்பலன் - 24.05.2022 | Indraya Rasi Palan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


24-05-2022, வைகாசி 10, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பகல் 10.45 வரை பின்பு தேய்பிறை தசமி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 10.33 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் இரவு 10.33 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Nalla neram

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் - 24.05.2022 | Today rasi palan - 24.05.2022

மேஷம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி அடைய குடும்பத்தினர் உதவியாக இருப்பார்கள். வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை நிலவும்.

மிதுனம்

இன்று பிள்ளைகளிடம் வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம்.

கடகம்

இன்று உங்களுக்கு திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். உங்கள் ராசிக்கு மாலை 4.26 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் மாலை வேலையில் அனுகூலப் பலன்கள் கிட்டும். 

சிம்மம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு மாலை 4.26 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் வெளி நபர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நிதானம் தேவை. 

கன்னி

இன்று குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். ஆரோக்கிய பாதிப்புகள் சற்று குறையும். 

துலாம்

இன்று உங்களுக்கு பண புழக்கம் சற்று குறைவாக இருக்கும்-. கடன் வாங்கும் சூழ்நிலை கூட ஏற்படலாம். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். பேச்சில் பொறுமையோடு இருந்தால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை குறையும். பெண்களுக்கு பணிச்சுமை அதிகமாகலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வருமானம் சுமாராக இருக்கும்.

தனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் கிட்டும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

மகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படலாம். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். மதிநுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நல்லது.

கும்பம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பெரியவர்களின் அறிவுரையால் வியாபார ரீதியான பிரச்சினைகள் நீங்கும்.

மீனம்

இன்று எந்த செயலிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். உறவினர்களே உங்களின் முயற்சிகளுக்கு இடையூறாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். கொடுத்த கடன்கள் வீடு வந்து சேரும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001