குறள் : 756
உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்
மு.வ உரை :
இறையாக வந்து சேரும் பொருளும் சுங்கமாகக் கொள்ளும் பொருளும் தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.
கலைஞர் உரை :
வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்.
சாலமன் பாப்பையா உரை :
வாரிசுதாரர் இல்லாமல் வந்த பொருள் வெளிநாட்டு பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி தன் பகைவர் தனக்குக் கட்டும் கப்பம் என்னும் இவை எல்லாம் அரசிற்கு உரிய பொருள்களாம்.
Kural 756
Uruporulum Ulku Porulumdhan Onnaarth
Theruporulum Vendhan Porul
Explanation :
Unclaimed wealth wealth acquired by taxes and wealth (got) by conquest of foes are (all) the wealth of the king.
Horoscope Today: Astrological prediction for May 21, 2022
இன்றைய ராசிப்பலன் - 21.05.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
21-05-2022, வைகாசி 07, சனிக்கிழமை, சஷ்டி திதி பகல் 02.59 வரை பின்பு தேய்பிறை சப்தமி. திருவோணம் நட்சத்திரம் இரவு 11.46 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். ஹயக்ரீவருக்கு உகந்த நாள். முருக வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Nalla neram
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 21.05.2022 | Today rasi palan - 21.05.2022
மேஷம்
இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். உடல் நிலை சிறப்பாக இருக்கும். பெரிய மனிதரின் உதவியுடன் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும்.
ரிஷபம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் செலவுகள் ஏற்படலாம். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. வியாபார ரீதியான முயற்சிகளில் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
மிதுனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். சுப பாரிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நிதானம் தேவை.
கடகம்
இன்று செய்யும் செயல்களில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.
சிம்மம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாகும். வியாபார சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வேலையில் உள்ள பிரச்சினைகள் சற்று குறையும். வருமானம் இரட்டிப்பாகும்.
கன்னி
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வருமானம் குறையும். குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.
துலாம்
இன்று எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நண்பர்களின் ஆதரவு உள்ளத்திற்கு மகிழ்வை தரும். வேலையில் பணிசுமை அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
விருச்சிகம்
இன்று உறவினர்களால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை தீரும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களின் செயல்கள் பாராட்டப்படும்.
தனுசு
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் சிறு மன சங்கடங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும்.
மகரம்
இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் அனுகூலப் பலனை அடைவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். திருமண பேச்சுவார்த்தைகள் சாதகப் பலனை அளிக்கும்.
கும்பம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சில தடைக்குப் பின்பு அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கு இடையே ஒற்றுமை குறைவு உண்டாகும். நெருங்கியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன்கள் குறையும்.
மீனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001