குறள் : 753
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று
மு.வ உரை :
பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்
கலைஞர் உரை :
பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது.
சாலமன் பாப்பையா உரை :
பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும்.
Kural 753
Porulennum Poiyaa Vilakkam Irularukkum
Enniya Theyaththuch Chendru
Explanation :
The imperishable light of wealth goes into regions desired (by its owner) and destroys the darkness (of enmity therein).
Horoscope Today: Astrological prediction for May 17, 2022
இன்றைய ராசிப்பலன் - 17.05.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
17-05-2022, வைகாசி 03, செவ்வாய்க்கிழமை, பிரதமை திதி காலை 06.26 வரை பின்பு துதியை திதி பின்இரவு 03.00 வரை பின்பு தேய்பிறை திரிதியை. அனுஷம் நட்சத்திரம் பகல் 10.46 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் பகல் 10.46 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Nalla neram
மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 17.05.2022 | Today rasi palan - 17.05.2022
மேஷம்
இன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.
ரிஷபம்
இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். உங்கள் முயற்சிகளுக்கு அனுகூலமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சக நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி நற்பலன் உண்டாகும்.
மிதுனம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உதவியால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். தொழில் வளர்ச்சிக்கான புதிய முயற்சிகள் நற்பலனை தரும். தக்க நேரத்தில் பண வரவு கிட்டும்.
கடகம்
இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.
சிம்மம்
இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பொருளாதார நெருக்கடி ஓரளவு குறையும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் உத்தியோகத்தில் தேவையற்ற சிக்கலை தவிர்க்கலாம்.
கன்னி
இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் சிக்கல்கள் விலகும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்று குறையும். நண்பர்களால் அனுகூலம் கிடைக்கும்.
துலாம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் இருக்கும் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
விருச்சிகம்
இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளால் நன்மை ஏற்படும். வெளியூர் நபர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
தனுசு
இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெற முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினரை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
மகரம்
இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள் சற்று குறையும். உடல் ஆரோக்கியம் சீராகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் நீங்கள் செய்யும் மாற்றத்தால் நன்மை அடைவீர்கள்.
கும்பம்
இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுப செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். பெரியவர்களின் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரம் சாதகமாக இருக்கும்.
மீனம்
இன்று பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமாக கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியும். உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கேற்ப அனுகூலப்பலன் உண்டாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001