குறள் : 752
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
மு.வ உரை :
பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார் செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்.
கலைஞர் உரை :
பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது.
சாலமன் பாப்பையா உரை :
பணம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர்.
Kural 752
Illaarai Ellaarum Elluvar Selvarai
Ellaarum Seyvar Sirappu
Explanation :
All despise the poor; (but) all praise the rich.
Horoscope Today: Astrological prediction for May 16, 2022
இன்றைய ராசிப்பலன் - 16.05.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
16-05-2022, வைகாசி 02, திங்கட்கிழமை, பௌர்ணமி திதி காலை 09.44 வரை பின்பு தேய்பிறை பிரதமை. விசாகம் நட்சத்திரம் பகல் 01.17 வரை பின்பு அனுஷம். மரணயோகம் பகல் 01.17 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.
இராகு காலம் | Indraya Nalla neram
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் - 16.05.2022 | Today rasi palan - 16.05.2022
மேஷம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு காலை 7.53 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பெண்கள் பணம் நகை போன்றவற்றை இரவல் தருவதை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.
ரிஷபம்
இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகும்.
மிதுனம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
கடகம்
இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழிலில் கூட்டாளிகளால் நன்மை ஏற்படும். உற்றார் உறவினர்களால் அனுகூலப்பலன் கிட்டும்.
சிம்மம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.
கன்னி
இன்று எதிர்பாராத வகையில் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் விருத்திக்கான புதிய முயற்சிகள் நன்மை தரும். கொடுக்கல்& வாங்கலில் கணிசமான லாபம் உண்டாகும்.
துலாம்
இன்று உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் எந்த முயற்சிகளிலும் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பிள்னைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவுடன் உத்தியோக ரீதியான பிரச்சினைகள் தீரும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிட்டும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகள் நன்மையில் முடியும்.
தனுசு
இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
மகரம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வருமானம் பெருகும். கடன்கள் குறையும்.
கும்பம்
இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலனை தரும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும்.
மீனம்
இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன்& மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு காலை 7.53 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் இரு நாட்களாக இருந்த குழப்பங்கள் விலகும். பணப் பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001