குறள் : 749
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்
மு.வ உரை :
போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.
கலைஞர் உரை :
போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்ளே இருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை :
போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண்.
Kural 749
Munaimukaththu Maatralar Saaya Vinaimukaththu
Veereydhi Maanta Tharan
Explanation :
A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield.
Horoscope Today: Astrological prediction for May 13, 2022
இன்றைய ராசிப்பலன் - 13.05.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
13-05-2022, சித்திரை 30, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி மாலை 05.27 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. அஸ்தம் நட்சத்திரம் மாலை 06.48 வரை பின்பு சித்திரை. அமிர்தயோகம் மாலை 06.48 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Nalla neram
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 13.05.2022 | Today rasi palan - 13.05.2022
மேஷம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோக ரீதியாக நற்பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பெற்றோரிடமிருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
மிதுனம்
இன்று உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினை குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். நண்பர்களால் நல்லது நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.
கடகம்
இன்று நீங்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சிலர் நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். உறவினர்கள் வழியாக மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் நல்லது நடக்கும். பழைய கடன்கள் வசூலாகும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் அமைதி நிலவ பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார பிரச்சினைகள் நீங்கி மன நிம்மதி இருக்கும்.
கன்னி
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தொழில் ரீதியான புதிய முயற்சிக்கு அனுகூலப் பலன் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.
துலாம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
விருச்சிகம்
இன்று உள்ளம் மகிழும் செய்திகள் உங்களை தேடி வரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும்.
தனுசு
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும்.
மகரம்
இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்தால் நற்பலனை அடையலாம். வேலைபளு குறைந்து மன நிம்மதி ஏற்படும்.
கும்பம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமத நிலை ஏற்படும். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை.
மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவியால் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.