குறள் : 747

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்

பற்றற் கரிய தரண்


மு.வ உரை :

முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும் வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.


கலைஞர் உரை :

முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்.


சாலமன் பாப்பையா உரை :

முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டாலும் சூழாமல் வலு இழந்த இடத்தில் நெருங்கிப் போரிட்டாலும் உள்ளிருப்போரில் சிலரை ஐந்தாம் படை ஆக்கினாலும், பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதே அரண்.


Kural 747

Mutriyum Mutraa Therindhum Araippatuththum

Patrar Kariyadhu Aran


Explanation :

A fort is that which cannot be captured by blockading assaulting or undermining it.

Horoscope Today: Astrological prediction for May 11, 2022

இன்றைய ராசிப்பலன் - 11.05.2022 | Indraya Rasi Palan

இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

11-05-2022, சித்திரை 28, புதன்கிழமை, தசமி திதி இரவு 07.32 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. பூரம் நட்சத்திரம் இரவு 07.27 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. 

இராகு காலம் | Indraya Nalla neram

மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

இன்றைய ராசிப்பலன் - 11.05.2022 | Today rasi palan - 11.05.2022

மேஷம்

இன்று மருத்துவ செலவுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். எந்த செயல் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். 

மிதுனம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள். கடன் பிரச்சனை தீரும். வீண் செலவுகள் குறைந்து மன நிம்மதி ஏற்படும்.

கடகம்

இன்று உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். மற்றவர்களுக்கு உதவி செய்து நிம்மதி அடைவீர்கள்.

சிம்மம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

கன்னி

இன்று உங்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகள் வழியில் மனசங்கடங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். தொழிலில் அனுகூலப்பலன் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

துலாம்

இன்று- உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பணவரவு தாரளமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். கொடுத்த கடன் வசூலாகும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும்.

தனுசு

இன்று எடுக்கும் முயற்சிகளில் தடைகள் உண்டாகலாம். நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

மகரம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத டென்ஷன், ஆரோக்கிய குறைவு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கும்பம்

இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

மீனம்

இன்று காலையிலேயே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இதுவரை வராத பழைய கடன்கள் வசூலாகும். பிள்ளைகளால் பெருமை சேரும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001