How to make Horlicks powder at home in Tamil

How tl



தேவையான பொருட்கள் அளவு
கோதுமை ஒரு கப் (அ) 1/4 கிலோ
பாதாம் பருப்பு 50 கிராம்
நிலகடலை 50 கிராம்
சர்க்கரை 1 கப்
பால் பவுடர் 1 கப்

செய்முறை  :

கோதுமையை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் ஊறவைத்த கோதுமையை வடிக்கட்டி ஒரு வெள்ளை துணியில் கட்டி 3 நாட்கள் வைத்தால் முளைக்கட்டும். 

பின் முளைக்கட்டிய கோதுமையை எடுத்து பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும்.

பின்பு, பாதம் பருப்பு மற்றும் நிலக்கடலை இரண்டையும் லேசாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த கோதுமையை நன்கு பொடியாக்கி அதை சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு வறுத்த நிலக்கடலை மற்றும் பாதாமை பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்.

சலித்த கோதுமை மாவு மற்றும் நிலக்கடலை பாதாம் பொடியையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.கலந்த மாவுடன் பால் பவுடர், பொடியாக அரைத்த சர்க்கரை என்று ஒன்றன் பின் ஒன்றாக நன்கு கலந்தால் ஹோமேட் ஹார்லிக்ஸ் ரெடி.

இதனை குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுத்து பாருங்கள். குழந்தைகள் மகிச்சியாக பருகுவார்கள். குழந்தைகளுக்கு ஊட்டச் சத்தும் கிடைக்கும். குழந்தைகள் மட்டுமின்றி பெண்களுக்கும் பெரியோர்களும் இதனை சாப்பிடலாம். எந்த கலப்படமும் இல்லாத ஹோமேட் ஹார்லிக்ஸ் இது.