Grocery trader from Vilapakkam area arrested under Pokcho Act
ஆற்காடு அருகே உள்ள விளாப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (வயது 32). மளிகை வியாபாரி. இவர் பிளஸ்-2 படிக்கும் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராணிப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுகி, மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பாண்டுரங்கனை கைது செய்தனர்.