Chandrashtama days meaning in tamil
பொதுவாக, சந்திரன் ராசிக்கு எட்டாம் இடத்திற்கு வரும் அந்த இரண்டே கால் நாட்களை சந்திராஷ்டமம் என்பார்கள். இதில் தேய்பிறை சந்திராஷ்டமத்தை விட வளர்பிறை சந்திராஷ்டமம் அதிக சோகத்தை ஏற்படுத்தி விடும். இன்னும் சொல்லப்போனால் ஏழரை ஆண்டு காலம் சனி தரும் பலனை அந்த இரண்டே கால் நாளில் சந்திரன் கொடுத்து விடுவார் (அதாவது குறிப்பாக வளர்பிறை சந்திராஷ்டமத்தின் போது நான் சொல்கிறேன்)
சந்திராஷ்டமத்தில் செய்யக் கூடாதவை : பிறருக்கு வாக்கு கொடுக்க கூடாது, புதிய முயற்சிகள் செய்யக் கூடாது, அதிக தொலை தூர பயணங்கள் செய்யக் கூடாது (இல்லை தெரிந்தோ, தெரியாமலோ சந்திராஷ்டம நாளில் டிக்கெட் ரிசர்வ் செய்து விட்டால், சாமான்களை முன்பே ஒரு நல்ல நேரத்தில் சேகரிக்க தொடங்கி விடவேண்டும்) சொந்தமாக வாகனம் ஓட்டக் கூடாது (self-driving), வழக்கு தொடுப்பது, அறுவை சிகிச்சை செய்வது அன்றைய தினத்தில் கூடவே கூடாது. முடிந்தால் கிருஷ்ணா, ராமா என்று உங்கள் தினசரி வேலையை மட்டும் பொறுப்பாக பார்க்கலாம். அதில் தவறில்லை.