IMD warns cyclone Asani in Bay of Bengal to intensify into severe cyclonic storm in next 24 hours
தென் கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள அசானி புயலானது தீவிர புயலாக மாறி ஆந்திரா மற்றும் ஒடிசாவை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது, தற்போது அசாணி புயல் உருவாகியுள்ளது. வங்க கடலில் உருவான அசானி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று தீவிர புயலாக மாறும். இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற் பகுதிகளை சென்றடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் படி, 16 கி.மீ வேகத்தில் நகரும் இந்த புயல், விசாகப்பட்டினத்தில் இருந்து 970 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக உருமாறி வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அசானி புயலினால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இதுவரை இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வட ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் வரும் மே 10-ஆம் தேதி அசானி புயல் கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.