The juvenile in the culinary master murder case


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் திருமால் (வயது 54), சமையல் மாஸ்டர். கடந்த 21-ந் தேதி அதிகாலை இவரது வீட்டிற்கு அருகே நகராட்சிக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு பைப்புகளை மர்ம நபர்கள் உடைத்து மின்மோட்டாரை திருட முயற்சி செய்தனர்.

அப்போது சத்தம் கேட்டு எழுந்து வந்த சமையல் மாஸ்டர் திருமால் மோட்டார்திருடுவதை பார்த்து கூச்சலிட்டுளார். இதனால் மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் ஆற்காடு சீதாராமய்யர் தெருவைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 20) என்ற வாலிபர் திருமாலை இரும்பு பைப்பால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து செல்வகுமார் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.