ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் துறை சார்ந்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில்,
தமிழறிஞர் மு.வரதராசனார் திருவுருவச்சிலை அமைக்க ராணிப்பேட்டை நகர் பகுதியில் இடம் தேர்வு செய்து நுாலகத்துடன் பூங்கா அமைத்து இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அந்த வளாகத்தினை பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிங்கு ராஜா, ராணி நினைவு மண்டபத்தை புனரமைக்கும் திட்ட அறிக்கையை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
அந்த இடத்தில் எல்லைக்கற்கள் பதித்து இடத்தை கையகப்படுத்தி ஒரு சிறந்த நினைவு மண்டபத்தை அமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்த இரண்டு பணிகளையும் துறைசார்ந்த அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி முடிக்க வேண்டும் என்றார்.