ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பெரியமலை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் சென்றுவர கம்பி வட ஊர்தி அமைக்கப்பட்டுள்ளது.
அதன் அருகே மலை அடிவாரத்தில் மலை கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் அடிப்படை வசதிக்காக ஓய்வறை, கழிவறை, பூங்காக்கள், உணவு அறை போன்ற அடிப்படை வசதிகளை 7 தன்னார்வலர்கள் முன்வந்து ரூ.12 கோடி மதிப்பில் கட்ட அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 60 ஆயிரம் சதுர மீட்டர் அளவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கான கட்டப்பணிகள் நடந்து வருகிறது. அதில் தரைதளம் அமைக்கும் பணி முடிந்துள்ளது. இப்பணிகள் வேகமாக நடந்து வருவதாக கட்டட வடிவமைப்பாளர் தெரிவித்தார். கட்டடப்பணிகள் குறைபாடு இல்லாமலும், குறித்த காலத்திற்குள் முடித்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அமைச்சர் காந்தி உத்தரவிட்டார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
சோளிங்கர் பஸ்ஸ்டாண்டு மற்றும் தக்கான்குளம் ஆஞ்சநேயர் கோயில் அருகே தண்ணீர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர் காந்தி, வீராமுத்துாரில் பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்தார்.