Ram Navami 2022: Complete puja vidhi and fasting rules for devotees in Tamil

ராம நவமி அன்று விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், நம் எண்ணங்கள், லட்சியங்கள் நிறைவேறும்.

ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என்று வாழ்ந்தவன் ராமபிரான். தெய்வமாக இருப்பவன் மனிதனாக அவதரித்து ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்து காட்டியவன். ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தவனுடைய பெருமையே ராமாயணம் என்று எழுதப்பெற்றது. 

ராமன் காட்டிய வழியே நடக்க வேண்டும் என்று தான் இல்லம்தோறும் ராமாயணம் படிப்பதை பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ராமர் பிறப்பு அன்று ஆலய வழிபாட்டில் கலந்துகொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ராமர்-சீதை திருமணம் சொற்பொழிவுகளில் கலந்து கொண்டு, அந்தக் கதைகளைக் கேட்டால் திருமண பாக்கியம் கை கூடும். 

ராமர் நவமி திதியில் பிறந்ததால் அன்றைய தினம் ‘ராமநவமி’ என்று அழைக்கப்படுகிறது. அந்தத் திருநாள் 10. 4. 2022 (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. அன்றைய தினம் ராமபிரானை விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், ராமருடன் இணைந்து சீதா, லட்சுமணர், அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும் லட்சியங்கள் நிறைவேறும். அனுமன் வழிபாட்டால் தம்பதியர் ஒற்றுமை உருவாகும்.