Rahu, Ketu shift that brings changes in life ..!

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பங்குனி 29ம் தேதி (ஏப்ரல் 12) பிற்பகல் 1.48 மணியளவில் ராகு- கேது பெயர்ச்சி நிகழ உள்ளது.

ராகு கேது என்பது நிழல் கிரகம் என்று அழைக்கப்படுகிறது. தேவர்கள் பாற்கடலை கடைந்து அமுதத்தை பெறுகின்றனர். அமுதத்தை பெறுவதற்கு தேவர்களால் மட்டும் முடியாது என்ற நிலையில் அவர்கள் அசுரர்களின் உதவியையும் பெற்று பாற்கடலை அடைந்தனர். பாற்கடலை கடைவதற்கு அசுரர்கள் உதவி செய்ததால் அவர்களுக்கும் அமுதத்தை வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தம் செய்து இருந்தனர்.

ஆனால் அமுதத்தை உண்டால் சாகா வரம் கிடைக்கும் என்ற நிலையில் அசுரர்கள் அமிர்தத்தை உண்டால் பேரழிவு ஏற்படும் என்ற அச்சம் தேவர்களுக்கு உண்டானது. இதில் இருந்து காப்பதற்கு தேவர்கள் திருமாலின் உதவியை நாடினர்.

திருமால் அழகிய மோகினி வடிவமெடுத்து அமிர்தத்தை பரிமாறத் தொடங்கினார். தேவர்களை ஒரு வரிசையிலும் அசுரர்களை மற்றொரு வரிசையிலும் இருத்தி அமிர்தத்தை பரிமாறத் தொடங்கினார்

திருமால் நடமாடிக் கொண்டு தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தைப் பரிமாறினார் . மோகினியின் அழகில் கிறங்கியிருந்த அசுரர்கள் தமக்கு மட்டும் திருமால் அமிர்தம் பரிமாறாமல் இருப்பதை உணரவில்லை. அதனால் தேவர்கள் மட்டும் அமிர்தத்தை பெற்றனர்.

இதனை அறிந்த ஸ்வருபாபு என்ற அசுரன் தேவ வடிவு கொண்டு சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் அமர்ந்து கொண்டான். திருமாலும் இதனை கவனிக்காமல் தேவர்களின் வரிசையில் அமர்ந்திருந்த ஸ்வருபாபுவிற்கு அமிர்தத்தை பரிமாறிவிட்டார்.

அந்த அசுரனும் அமிர்தத்தை எடுத்து உண்டுவிட்டான். அதே நேரத்தில் திருமாலும் அசுரனை அடையாளம் கண்டு கொண்டார். தான் பரிமாறிக் கொண்டிருந்த கரண்டியால் அசுரனின் தலையை உடனடியாக கொய்து விட்டார். அதனால் தொண்டை வரை சென்று அமிர்தம் வயிற்றுக்குச் செல்லவில்லை. என்றாலும் அசுரன் அமிர்தத்தை புசித்து விட்டதால் அவனிற்கு சாகா வரம் கிடைத்து விட்டது. அதனால் மனிதத் தலையை கொண்டு உடம்பு பாம்பாகி ராகு தோன்றினார். மனித உடம்பை கொண்ட பாம்பு தலையுடன் கேது தோன்றினார். இவர்கள் சாகா வரம் பெற்றதால் கிரகங்களில் ஒருவராக மாறிவிட்டனர்.

என்றாலும் மற்ற கிரகங்களில் இல்லாத சிறப்பு ராகு கேது கிரகத்திற்கு உள்ளது. மற்ற கிரகங்களுக்கு இருப்பதை போல ராகு கேது கிரகத்திற்கு சொந்த வீடு இருப்பதில்லை. அவை எந்த கிரகத்திற்கு மாறுதலாகி செல்கின்றதோ அந்த கிரகத்தின் பலன்களையே அவை வழங்கும்.