சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் அலுவலகத்தில் சட்டசபையில் அறிவிக்கப்பட உள்ள அறிவிப்புகள் குறித்து அனைத்து மண்டல அலுவலர்களுடன் அமைச்சர் சேகர் பாபு 2ம் நாளாக நேற்று இரவு ஆலோசனை நடத்தினர்.
முந்தைய மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மற்றும் வருகிற மானியக் கோரிக்கையின்போது அறி விக்கப்பட உள்ள அறிவிப்புகள் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டது.
திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக் கோட்டை, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம், ஆகிய 5 மலைக் கோயில்களில் 'ரோப்கார்' வசதி செய்ய - தொழில் நுட்ப வல்லுநர்களால் ஆராயப்பட்டுள்ளது.
சோளிங்கர், ஐய்யர் மலை ஆகிய மலைக்கோயில்களில் 'ரோப்கார்' வெள்ளோட்டம் விரைவில் நடக்க இருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.