Here we have details of Kala devi temple in Tamil


ஊர் ஊராக சென்றும் கோயில் கோயிலாக தரிசித்தும் நொந்து போன மனதுடன் இன்னும் வாழ்கிறீர்களா.. உங்களுக்கு நல்ல நேரம் வந்தால் மட்டுமே இந்தக் கால தேவி கோயில் பற்றி கேள்விப்படுவீர்கள். நல்ல நேரம் வந்து விட்டால் இந்தக் கோயிலை நீங்கள் சென்று தரிசிப்பீர்கள்.

Goddess of Time : இரவில் மட்டும் திறந்திருக்கும் கோயில் ...


உலகம் முழுவதும் பகலில் கோவில் திறந்திருக்கும் இரவில் நடை அடைக்கப்பட்டு விடும். இரவு முழுவதும் திறந்திருக்கும் கோவில் ஒன்று இருக்கிறது. அது காலதேவி அருள்பாலிக்கும் நேரக்கோவில். நம்முடைய நேரம் நல்ல நேரமாக மாற காலதேவியை வேண்டிக்கொண்டால் போதும் கவலைகள் தீரும், கஷ்டங்கள் மறையும்

12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், நவகிரகங்கள் என அனைத்தும் சூழ அமைந்துள்ளது காலதேவி அம்மன் சிலை. நேரத்திற்காகவே கட்டப்பட்டுள்ளது இந்த காலதேவி அம்மன் கோவில். காலச் சக்கரத்தை இயக்கும் தலைவியாக அருள்பாலிக்கும் இந்த அம்மனின் கடைக்கண் பார்வை பெற்று விட்டால், கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாறி விடும். நேரத்தை மாற்றும் கோயில் என்பதால் நேரக்கோயில் என அழைக்கப்படுகிறது.

கால தேவியின் அம்மன் முன்பாக 11 நொடிகள் நின்று மனமுருகி நாம் வேண்டிக்கொண்டால் நம்முடைய கெட்ட நேரங்கள் நீங்கி நல்ல நேரமாக மாறும் என்பது நம்பிக்கை.

Nera kovil sri kaaladevi temple | நேரக் கோவில் காலதேவி அம்மன் ..


இங்கு எண்கோண வடிவ கருவறை உள்ளது. விமானமும் எண்கோண வடிவில் செங்குத்தாக உள்ளது. காலசக்கரத்தைக் குறிக்கும் விதத்தில், வட்டவளையங்களின் நடுவில் நட்சத்திர நாயகியாக அபய, வரதஹஸ்த முத்திரைகளுடன் காலதேவி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்🤗

11 நொடிகளில் காலச்சக்கரம் மாற்றும்
ஸ்ரீ கால தேவி இங்கு வரும் பக்தர்களின் காலத்தில் வீற்றிருந்து கெட்ட நேரங்களை நீக்கி அருள்புரிகிறார். இந்த கோவிலில் ஒரு அபூர்வமான கால சக்கரம் உள்ளது. இந்த கால சக்கரத்தில் அனைவரும் 11 நொடிகள் நிற்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி நிற்கும் நேரத்தில் நமது கால சக்கரமானது சுழன்று நமக்கு நல்ல நேரத்தை தரும் என்ற நம்பிக்கை இங்கு உள்ளது. இந்த கோவிலில் கால தேவிக்கு மட்டுமே சந்நிதி உள்ளது. மற்ற தெய்வங்களின் சிலை எதுவும் இந்த கோவிலில் இல்லை.

காலச்சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும் போது, எனக்கு அதைக்கொடு, இதைக் கொடு, அவனை பழிவாங்கு என வேண்டுதல்கள் இல்லாமல்,எனக்கு எது நல்லதோ அதைக் கொடு என வேண்டினால் போதும். 

Kala devi temple address and history in Tamil is here


கோவில் அமைவிடம் - மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயின்ரோட்டில் இறங்க வேண்டும். டி. கல்லுப்பட்டியில் இருந்து ஆட்டோவிலும் போகலாம். சாதாரண நாட்களில் செல்வதைவிட பவுர்ணமி, அமாவாசை நாட்களில் செல்வதே சிறப்பு.