ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு இல்லை. இந்நிலையில் நேற்று ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி யாகியுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய் பரவல் மீண்டும் ஆரம்பித் துள்ளது.
இந்நிலையில் அரசு முககவசம், மக்கள் அதிகம் கூடுதல், சுப நிகழ்ச்சிகளில் கூடும் மக்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை நீக்கியிருந்தாலும் சுயபாதுகாப்பாக மக்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். கைகளை அடி. கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும், தேவையின்றி வெளியில் சுற்ற வேண்வேண்டாம்.
எங்கு சென்றாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். நோய் அறிகுறி இருந்தால் தயக்கமின்றி அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியை அணுக வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும், இரண்டா வது மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்களும் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார ஆஸ்பத்திரி மற்றும் நகர்ப்புற ஆஸ்பத்திகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசி மட்டுமே நோய் பாதிப்பிலிருந்து மக்களை காக்கும். நோய் தொற்று ஏற்பட்டாலும் அதிலிருந்து மீள முடியும். என்று ராணிப்பேட்டை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் மணி மாறன் கூறினார்.