குறள் : 729
கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்
மு.வ உரை :
நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர் கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.
கலைஞர் உரை :
ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களாவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை :
நூல்களைக் கற்றும் அவற்றின் பயனை அறிந்தும், நல்லவர் கூடிய அவையைக் கண்டு பயந்து அங்கே செல்லாதவர், படிக்காதவரைவிடக் கீழானவர் என்று சொல்லுவர்.
Kural 729
Kallaa Thavarin Kataiyenpa Katrarindhum
Nallaa Ravaiyanju Vaar
Explanation :
They who though they have learned and understood are yet afraid of the assembly of the good are said to be inferior (even) to the illiterate.
Horoscope Today: Astrological prediction for April 23, 2022
இன்றைய ராசிப்பலன் - 23.04.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
23-04-2022, சித்திரை 10, சனிக்கிழமை, சப்தமி திதி காலை 06.27 வரை பின்பு அஷ்டமி திதி பின்இரவு 04.30 வரை பின்பு தேய்பிறை நவமி. உத்திராடம் நட்சத்திரம் மாலை 06.53 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. பைரவர் வழிபாடு நல்லது. வாஸ்து நாள் காலை 8.50 மணி முதல் 9.26 மணி வரை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 23.04.2022 | Today rasi palan - 23.04.2022
மேஷம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.
மிதுனம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.
கடகம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக ஈடுபாடு உண்டாகும். தொழிலில் லாபம் பெருகும்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவால் உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
கன்னி
இன்று உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். தொழில் ரீதியான முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
துலாம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைந்து பிரச்சினை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. கடன் பிரச்சினைகள் சற்று குறையும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் தாராள தன வரவும், சுபிட்சமும் உண்டாகும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
தனுசு
இன்று வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். வரவை விட செலவுகள் அதிகமாகும். தேவைகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகள் குறையும். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.
மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். பண பிரச்சினை நீங்கும்.
கும்பம்
இன்று உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வீண் செலவுகளும் அதிகரிக்ககூடும். தொழிலில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிட்டும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
மீனம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் அமோகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் வியாபாரத்தில் அனுகூலமான பலன் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.