குறள் : 722
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
மு.வ உரை :
கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர் கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.
கலைஞர் உரை :
கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார்.
சாலமன் பாப்பையா உரை :
தாம் கற்றவற்றை எல்லாம் பயப்படாமல் கற்றவர் அவையில் அவர் மனம் கொள்ளச் சொல்லும் திறம் பெற்றவர், கற்றவர் எல்லாரிலும் நன்கு கற்றவர் என்று பலராலும் சொல்லப்படுவார்.
Kural 722
Katraarul Katraar Enappatuvar Katraarmun
Katra Selachchollu Vaar
Explanation :
Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned.
Horoscope Today: Astrological prediction for April 16, 2022
இன்றைய ராசிப்பலன் - 16.04.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
16-04-2022, சித்திரை 03, சனிக்கிழமை, பௌர்ணமி திதி இரவு 12.25 வரை பின்பு தேய்பிறை பிரதமை. அஸ்தம் நட்சத்திரம் காலை 08.39 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சித்ரா பௌர்ணமி விரதம். தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 16.04.2022 | Today rasi palan - 16.04.2022
மேஷம்
இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளால் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடன் பிறந்தவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். வியாபார ரீதியாக இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிசுமை ஓரளவு குறையும்.
மிதுனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.
கடகம்
இன்று உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திடீர் பணவரவு உண்டாகும். கடன் பிரச்சினை தீரும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். அலுவலகத்தில் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் சிக்கல்களை தவிர்க்கலாம். வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் லாபம் தடைப்படாது. மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.
கன்னி
இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
துலாம்
இன்று உங்களுக்கு வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில தடங்கல்கள் ஏற்படலாம். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சிலருக்கு புதிய பொருள், வண்டி, வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.
தனுசு
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ரூவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.
மகரம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களுடன் வீண் வாக்கு வாதங்கள் தோன்றும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் நிறைவேறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்பட்டாலும் குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
கும்பம்
இன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் சொல்லாமல் இருப்பது நல்லது.
மீனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் முழுமனதுடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு திடீர் பயணம் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலப்பலன் உண்டாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001