குறள் : 718
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
மு.வ உரை :
தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல் தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.
கலைஞர் உரை :
உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்.
சாலமன் பாப்பையா உரை :
பிறர் சொல்லாமலேயே தாமே பலவற்றையும் அறிந்து கொள்ளும் அறிவுத் திறம் உடையவர் கூடியுள்ள அவையில் பேசுவது வளரும் பயிர் நிற்கும் பாத்தியில் நீரினைப் பாய்ச்சியது போலாம்.
Kural 718
Unarva Thutaiyaarmun Sollal Valarvadhan
Paaththiyul Neersorin Thatru
Explanation :
Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves).
Horoscope Today: Astrological prediction for April 12, 2022
இன்றைய ராசிப்பலன் - 12.04.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
12-04-2022, பங்குனி 29, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 05.02 வரை பின்பு வளர்பிறை துவாதசி. ஆயில்யம் நட்சத்திரம் காலை 08.34 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது.
இராகு காலம்
மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
Today rasi palan - 12.04.2022 | இன்றைய ராசிப்பலன் - 12.04.2022
மேஷம்
இன்று உங்களுக்கு வண்டி வாகனங்களால் சிறு விரயங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை பெற முடியும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த கடன் திரும்ப பெறுவதில் சிக்கல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் நெருக்கடிகள் இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மன அமைதி பெற தெய்வ வழிபாடு செய்வது நல்லது.
மிதுனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும்.
கடகம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உடன்பிறப்புகள் வழியில் சுப செலவுகள் வந்து சேரும். தொழில் வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறைய சற்று சிக்கனமாக செயல்படுவது நல்லது.
சிம்மம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத சுப செலவுகள் செய்ய நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களால் இருந்த பிரச்சினைகள் விலகும். திடீர் பயணம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.
கன்னி
இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.
துலாம்
இன்று உங்களுக்கு அமோகமான பலனை தரும் நாளாக இருக்கும். தொழிலில் உங்கள் மதிப்பு கூடும். குடும்பத்தில் தாராள பண வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு நற்பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் நட்பு ஏற்படும்.
தனுசு
இன்று உங்கள் ராசிக்கு காலை 08.34 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழிலில் எதிர்பார்த்த லாபம் சில இடையூறுகளுக்குப் பின் கிடைக்கும். உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நெருக்கடிகள் குறையும்.
மகரம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமா-கும். உங்கள் ராசிக்கு காலை 08.34 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.
கும்பம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழிலில் உள்ள மந்தநிலை மாறும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.
மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. குடும்ப பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். எதிலும் தெம்போடு செயல்படுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,