குறள் : 715
நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள்
மு.வ உரை :
அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும நல்லது.
கலைஞர் உரை :
அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்.
சாலமன் பாப்பையா உரை :
தன் அறிவினுக்கும் மேலான அறிஞர் கூடியுள்ள அவையில் அவர் பேசுவதற்கு முன்பாகப் பேசாமல் அடங்கி இருப்பது, நல்லது என்று சொல்லப்பட்ட குணங்களுள் எல்லாம் நல்லது.
Kural 715
Nandrendra Vatrullum Nandre Mudhuvarul
Mundhu Kilavaach Cherivu
Explanation :
The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (ones) good qualities.
Horoscope Today: Astrological prediction for April 09, 2022
இன்றைய ராசிப்பலன் - 09.04.2022 | Today Rasi Palan | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம்
09-04-2022, பங்குனி 26, சனிக்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 01.24 வரை பின்பு வளர்பிறை நவமி. புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 04.30 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
Today rasi palan - 09.04.2022 | இன்றைய ராசிப்பலன் - 09.04.2022
மேஷம்
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுவார்கள். பணி புரிவோர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.
ரிஷபம்
இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். எளிதில் முடியும் காரியம் கூட தாமதமாக முடியும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளால் அனுகூலம் கிடைக்கும். உறவினர்களின் உதவியால் எடுத்த காரியத்தை முடிப்பீர்கள்.
கடகம்
இன்று உங்களுக்கு குடும்பத்தினருடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். தொழிலில் இருந்த மந்த நிலை மாற சற்று கூடுதல் முயற்சி தேவை. சுபகாரிய முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு ஆறுதலை தரும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
சிம்மம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் மறைந்து சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வேலையில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.
கன்னி
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.
துலாம்
இன்று உங்களுக்கு வரவிற்கேற்ற செலவுகள் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். சிக்கனமுடன் நடந்து கொள்வது நல்லது. புத்திர வழியில் அனுகூலங்கள் உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது.
விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் சம்பந்தமாக வெளிமாநில நண்பர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர். கடன் சுமை ஓரளவு குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய நபர்கள் அறிமுகம் உண்டாகும்.
மகரம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும்.
கும்பம்
இன்று நீங்கள் பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். புதிய முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். சேமிப்பு குறையும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் உடன்வேலை செய்பவர்கள் உதவியாக இருப்பார்கள். பணப்பிரச்சினை குறையும்.
மீனம்
இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளால் கையிருப்பு சற்று குறையும். வேலையில் உயர் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,