குறள் : 713

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்

மு.வ உரை :

அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர் சொற்களின் வகை அறியாதவரே அவர் சொல்லவல்லதும் இல்லை.

கலைஞர் உரை :

அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது.

சாலமன் பாப்பையா உரை :

தம் பேச்சைக் கேட்கும் சபையின் இயல்பை அறியாமல் தொடர்ந்து பேசத் தொடங்குபவர், சொற்களின் கூறம் தெரியாதவர்; சொல்லும் திறமும் இல்லாதவர்.

Kural 713

Avaiyariyaar Sollalmer Kolpavar Sollin
Vakaiyariyaar Valladhooum Il

Explanation :

Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning).

Horoscope Today: Astrological prediction for April 07, 2022

இன்றைய ராசிப்பலன் - 07.04.2022


இன்றைய பஞ்சாங்கம்

07-04-2022, பங்குனி 24, வியாழக்கிழமை, சஷ்டி திதி இரவு 08.33 வரை பின்பு வளர்பிறை சப்தமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 10.41 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம்

மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

Today rasi palan - 07.04.2022 | இன்றைய ராசிப்பலன் - 07.04.2022

மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். வேலையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்களால் மனநிம்மதி சற்று குறையும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

மிதுனம்

இன்று இல்லத்தில் தாராள தன வரவும், சுபிட்சமும் உண்டாகும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கடகம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிட்டும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளால் பெருமை சேரும். சுப காரியங்கள் கைகூடும்.

கன்னி

இன்று நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.

துலாம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு காலை 09.09 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் ரீதியான பிரச்சினைகள் மதியத்திற்கு பின் சீராகும்.

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு காலை 09.09 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நிதானமாக செயல்படுவது, வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. 

தனுசு

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும்.

மகரம்

இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபார ரீதியான பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்பட்டால் பண நெருக்கடியை தவிர்க்கலாம். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். அனாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது.

மீனம்

இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடல் உபாதைகள் குறையும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,