குறள் : 711

அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்

மு.வ உரை :

சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர் அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்றச் சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

கலைஞர் உரை :

ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை :

செஞ்சொல் பொருள் வெளிப்படையான சொல் தாய் இலக்கணச் சொல்.(வெளிப்படையான பொருளை விட்டுவிட்டு வேறொன்றை உணர்த்தும் சொல் ஊர் தூங்குகிறது) குறிப்புச் சொல் வெளிப்படையான பொருளை விட்டுவிட்டுக் குறிப்பால் வேறொரு பொருள் தருவது பொன்காக்கும் பூதம் அவன்) ஆகிய சொற்களின் கூட்டத்தை அறிந்த மனத்தூய்மையை உடையவர். தமக்கும் மேலான கல்வியாளர் கூடியிருக்கும் அவை. சமமானவர் அவை. குறைவான கல்வியாளர் அவை என அவற்றின் தரம் அறிந்து அங்கே பேசும் திறத்தை ஆராய்ந்து பேசுக.

Kural 711

Avaiyarinadhu Aaraaindhu Solluka Sollin
Thokaiyarindha Thooimai Yavar

Explanation :

Let the pure who know the arrangement of words speak with deliberation after ascertaining (the nature of) the court (then assembled).

Horoscope Today: Astrological prediction for April 05, 2022

இன்றைய ராசிப்பலன் - 05.04.2022


இன்றைய பஞ்சாங்கம்


05-04-2022, பங்குனி 22, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி பகல் 03.45 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. கிருத்திகை நட்சத்திரம் மாலை 04.51 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் மாலை 04.51 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. அங்கார சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது.

இராகு காலம்

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

Today rasi palan - 05.04.2022 | இன்றைய ராசிப்பலன் - 05.04.2022


மேஷம்


இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். தெய்வ வழிபாடு நல்லது.

ரிஷபம்


இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் மூலம் அனுகூலப் பலன் உண்டாகும். புது பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.

மிதுனம்


இன்று உங்களுக்கு வேலை நிமித்தமாக உடல் சோர்வும் அலைச்சலும் உண்டாகும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஓரளவிற்கு ஆதரவாக இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

கடகம்


இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபங்கள் உண்டாகும். வங்கி சேமிப்பு உயரும்.

சிம்மம்


இன்று இல்லத்தில் தாராள தன வரவும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடல்நிலை சீராகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

கன்னி


இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினரின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும்.

துலாம்


இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் பணம் சம்மந்தமான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை.

விருச்சிகம்


இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று அதிகரிக்கும். வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் சேமிக்க முடியும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்து நல்ல லாபத்தை அடைவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

தனுசு


இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். நினைத்த காரியங்கள் தடையின்றி எளிதில் நிறைவேறும்.

மகரம்


இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். திருமண முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் அனுகூலப் பலன் கிட்டும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும்.

கும்பம்


இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.

மீனம்


இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,