குறள் : 707
முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்
மு.வ உரை :
ஒருவன் விருப்பம் கொண்டாலும் வெறுப்புக் கொண்டாலும் அவனுடைய முகம் முற்ப்பட்டு அதைத் தெரிவிக்கும் அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ.
கலைஞர் உரை :
உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை.
சாலமன் பாப்பையா உரை :
ஒருவன் மனத்தால் விரும்பினாலும் வெறுத்தாலும் அதை வெளிக்காட்டுவதில் முந்தி நிற்கும் முகத்தைக் காட்டிலும் அறிவு மிக்கது வேறு உண்டோ?.
Kural 707
Mukaththin Mudhukkuraindhadhu Unto Uvappinum
Kaayinum Thaanmun Thurum
Explanation :
Is there anything so full of knowledge as the face ? (No.) it precedes the mind whether (the latter is) pleased or vexed.
Horoscope Today: Astrological prediction for April 01, 2022
இன்றைய ராசிப்பலன் - 01.04.2022
இன்றைய பஞ்சாங்கம்
01-04-2022, பங்குனி 18, வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி பகல் 11.54 வரை பின்பு வளர்பிறை பிரதமை. உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 10.40 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. அம்மன் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
Today rasi palan - 01.04.2022 | இன்றைய ராசிப்பலன் - 01.04.2022
மேஷம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் உண்டாகலாம். உடன் பிறந்தவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் வெளியூர் பயணங்களால் லாபம் கிட்டும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.
மிதுனம்
இன்று தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். எதிர்பாராத வகையில் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை தரும்.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளிப் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
கன்னி
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கடின உழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
துலாம்
இன்று உத்தியோகஸ்தர்கள் அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு சாதகமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உண்டாகும். வேலை விஷயமாக செல்லும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெரிய மனிதர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
தனுசு
இன்று குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். தொழிலில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. நெருங்கியவர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுபகாரியங்கள் சிறு தடைக்குப் பின் கைகூடும்.
மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபார ரீதியாக உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நெருக்கடியால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
மீனம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். தொழில் வளர்ச்சிக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,