தினமும் அதிக நேரம் நடப்பதுதான் இதற்கு சிறந்த தீர்வு.

சிம்பிள்..

காலையில் 5 க்கு எழுந்திரியுங்கள்.

உங்களுக்கான குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்து கொண்டு..

5.30 மணி முதல் 7 மணி வரை நிற்காமல் தொடர்ந்து நடங்கள். இதையே மாலையும் 5.–6.30 வரை தொடர்ந்து நடங்கள். தொடர்ந்து நடக்கும்போது உடல் உறுப்புகள் தொடர்ந்து இயங்கும். தொடர்ந்து இயங்க இயங்க உள்ளுறுப்புகள் சூடாகும்.

சூடாக சூடாக உடலில் உள்ள வாயுக்கள் வெளியேறும்.

பலர் நினைக்கிறார்கள். உடல் பருமனாக இருப்பதற்குக் காரணம் கொழுப்பு தேங்குவதால் என்று. அது மட்டுமல்ல..

உடலில் வாயு தேங்கினாலும் இவ்வாறு உடல் பருமன் ஏற்படலாம்.

இவை எல்லாத்துக்கும் ஒரே வழி.. நடப்பதுதான்.

நடக்கும்போது கையை கிட்டத்தட்ட தோள்பட்டை வரை மேலே உயர்த்தும் அளவுக்கு நன்றாக வீசுங்கள்.

இவ்வாறு செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

மிதிவண்டி கூட ஓட்டலாம். ஆனால் அது ரொம்ப நேரம் ஓட்ட முடியாது. முடியுமென்றால் காலை கீழே வைக்காமல் 2 மணி நேரம் ஓட்டுங்கள்.

அதற்கு பதிலாகத் தான் எளிமையாக தொடர்ந்து நடங்கள். நடக்க நடக்க நிச்சயம் உடல் எடை குறையும்.

உங்களது இலக்கு 1 நாளைக்கு 3 மணி நேரம் வீதம் 100 நாட்கள்.. 

300 மணி நேரங்கள்.

இப்படி 300 மணி நேரங்கள் நீங்கள் நடந்துவிட்டால்.. நிச்சயம் உடலைக் குறைக்கலாம்.

உங்களுக்கான சலுகையாக, நீங்கள் இதைத் தொடர்ந்து கடைபிடித்தால் 100 நாட்கள் முழுமையாக நிறைவடைவதற்குள் ஏன் 75 நாட்களுக்குள்ளேயே நீங்கள் விரும்பிய அளவுக்கு உங்கள் உடல் எடையைக் குறைக்க முடியும். 

இதனால் மேலும் பல பயன்கள் உள்ளன சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் இதயம் பலப்படும்

குறிப்பு: செருப்பு போட்டு நடக்க கூடாது. விலை குறைவானாலும் பரவாயில்லை ஒரு ஷூ வாங்கி போட்டுக் கொள்ளுங்கள்.