ஒருதலை காதலால் கோயிலுக்கு சென்ற கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம், அடுத்த உத்திரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் மாணவி நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் வீட்டின் அருகே உள்ள கோயிலுக்கு சுவாமி கும்பிட சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நிதிஷ்கு மார்(23), மாணவியை பின் தொடர்ந்து சென்று காதலிக்க வற் புறுத்தியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி காதலை ஏற்க மறுத்துல்லார ஆனாலும் அவர் ஒருதலையாக மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், தொடர்ந்து மாணவி காதலை ஏற்க மறுத்த தால், நிதிஷ்குமார் ஆத்திரமடைந்து தான் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி மாணவி கிழே விழுந்தார்.
இச்சம்பவத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் இருந்த வரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வாலிபரை தேடி வருகின்றனர்.