Yelagiri Express Rail operates as a pre-registered service

சென்னை சென்டிரல் - ஜோலார்பேட்டை இடையே ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பதிவில்லா சேவையாக வருகிற 1-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.

கொரோனா பாதிப்பால் நிறுத்தம்


ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் காலை 5 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டு காலை 9.10 மணிக்கு சென்னை சென்ி்ரலுக்கு வந்தடையும். மாலை 5.55 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு இரவு 10.25 மணிக்கு ஜோலார்பேட்டைக்கு சென்றடையும் வகையில் இயக்கப்பட்டு வந்தது.

இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அலுவலக நேரத்திற்கு இயக்கபடுவதால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் அலுவலக ஊழியர்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பணியாளர்கள், பெண்கள் என பலருக்கும் வசதியாக இருந்தது. கொரோனா கால கட்டத்தில் ரெயில்கள் சேவை நிறுத்தப்பட்டபோது இந்த ரெயிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

மீண்டும் இயக்கம்


இந்த நிலையில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து ரெயில்கள் சேவையும் தொடங்கியது. முதல் கட்டமாக சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனையடுத்து ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் முன்பதிவில்லா ரெயிலாக இயக்க வேண்டும் என ரெயில்வே பொது மேலாளார், சென்னை கோட்ட மேலாளர், ரெயில்வே வாரிய உறுப்பினர் பொன்.பாலகணபதி உள்ளிட்டோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை சென்டிரல் - ஜோலார்பேட்டை இடையே முன்பதிவில்லா ரெயிலாக வரும் 1-ந் தேதி முதல் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரெயில் பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.