எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேற கூடிய வகையில் இந்த பரிகாரம் அமைய இருக்கிறது. ஒருவருடைய பீரோ சரியான திசையில் முதலில் வைத்திருக்க வேண்டும். பீரோவின் கதவை நீங்கள் திறந்து பார்க்கும் பொழுது உள்ளே மகாலட்சுமியின் படம் அல்லது கஜலட்சுமியின் படம் இருக்க வேண்டும்.கஜலட்சுமி என்பவர் அட்ட லட்சுமிகள் எனும் எட்டுவகையான இலட்சுமிகளுள் ஒருவராவார். இவர் பாற்கடல் மதனம் எனும் நிகழ்வின் போது தோன்றியவள். அவ்வாறு தோன்றும் போது இருபுறம் யானைகள் வந்து அபிசேகம் செய்தன. இதனால் இவரை கஜலட்சுமி என்கின்றனர். கஜ என்றால் யானையாகும். பச்சை நிற புடவை கட்டி கொண்டிருக்கும் கஜலட்சுமி தேவி அள்ள அள்ள குறையாத பணத்தை கொடுப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது.
பீரோவில் கட்டு கட்டாக பணம் சேர பச்சை நிற புடவை அணிந்திருக்கும் கஜலட்சுமி, யானைகளின் அபிஷேகத்துடன் இருப்பாள். அந்த படத்தை வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, வெள்ளிக்கிழமை தோறும் தூபத்தை காண்பியுங்கள். மகாலட்சுமிக்கு மல்லிகைப்பூ என்றால் மிகவும் விருப்பமானதாகும். ஆகவே பூஜையின் போது கஜலட்சுமி தேவிக்கு மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். அர்ச்சிக்கும் பொழுது 💫‘கஜலட்சுமி தேவியை நமஹ’💫 என்ற மந்திரத்தை 9 முறை சொல்லுங்கள்.
ஒரு வெள்ளைக் காகிதத்தில் உங்களுடைய வேண்டுதல்களை எழுதி வையுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் வாழ்க்கையில் இருக்கும். உங்கள் பிரச்சனை பணமாக இருந்தாலும் சரி, வேறு எதுவாக இருந்தாலும் சரி அவற்றை எழுதி நான்காக மடித்து கஜலட்சுமி தாயார் முன்பு வைத்து, சந்தனம் குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். இப்படி ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் செய்யும் பொழுது உங்களுக்கு தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய யோகத்தை தேவி அமைத்து தருவார்கள்.
கஜலக்ஷ்மியை வணங்குபவர்களுக்கு சகல, சௌபாக்கியங்களும் கிடைக்கும். பதினாறு செல்வங்களும், பரிவாரங்களும் அமையும் என்பது ஐதீகம். தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றில் உண்டாகக்கூடிய பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கின்றார். பௌர்ணமி நாளில் கஜலட்சுமி தாயாருக்கு குத்து விளக்கு ஏற்றி, கல்கண்டு தீபம் ஏற்றி வர, கட்டு கட்டாக பீரோ முழுவதும் பணமாக சேரும். இவை சுயநலத்தோடு செய்யும் பொழுது எண்ணங்கள் தடைபடும்...பொதுநல எண்ணத்தோடு செய்யும் பொழுது நிச்சயமாக நிறைவேறும்.