When children begin to crawl, this is what parents need to do


குழந்தை தவழ ஆரம்பித்துவிட்டால், வீட்டில் எந்த ஒரு பொருளையும் குழந்தையின் கைக்கு எட்டும்படி வைக்காதீர்கள். முக்கியமாக கூர்மையான பொருட்களை எப்போதும் மேலே வைத்துவிடுங்கள். இதனால் எந்த ஒரு அசம்பாவீதமும் நடக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

தவழும் குழந்தையை எப்போதும் படுக்கை அறையில் உள்ள கட்டிலில் தனியாக விடக்கூடாது. அப்படிவிட்டால், எவ்வளவு தான் தலையணையை அவர்களைச் சுற்றி வைத்தாலும், அவர்கள் அதனை தாண்டி விழுந்துவிடுவார்கள்.

உங்கள் தவழும் செல்ல குட்டியை பேபி கட்டில்(Baby cot) போட்டு செல்லும் போது கவனமாக இருக்கவும். ஏனெனில் குழந்தை தவழ்கிறது என்றால், அவர்களால் எதையாவது பிடித்து நிற்கும் வலிமையும் இருக்கும். எனவே அவர்கள் பேபி கட்டில் இருந்து வெளியே வரமுடியாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தை தவழ ஆரம்பிக்கும் போது, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நல்ல வண்ணமயமான பொருளை அவர்களின் பார்வைக்கு எட்டும் தூரத்தில் வைத்துவிட்டு, அவர்களை எடுக்கச் சொல்லுங்கள். இதனால் அவர்கள் குதூகலத்துடன் சந்தோஷமாக இருப்பார்கள்.

உங்கள் வீட்டில் குழந்தை இருந்தால், தினமும் தவறாமல் வீட்டுத் தரையை நன்கு கூட்டி, தண்ணீர் கொண்டு துடையுங்கள். இதனால் தரையில் தவழும் போது, கையை வாயில் வைத்தாலும் எந்த ஒரு நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் இருக்கும்.

குழந்தை தவழ ஆரம்பித்தால், அவர்களை நடக்க வைக்க உதவுங்கள். இதனால் அவர்கள் விரைவில் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள்.