The young man who fell into the well in Walaja died tragically
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா கணபதி நகரில் உள்ள தனியார் கிணறு ஒன்றில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கிணற்றில் பிணமாக கிடந்தவர் வாலாஜாபேட்டை கச்சாலன் தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் பிரதீப் குமார் (வயது 26) என்பது தெரியவந்தது.
கிணற்றில் அருகே சென்றபோது தவறி விழுந்து, நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.