Temporary instructor can apply for contract job in Government Vocational Training Center
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ராணிப்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள தற்காலிக பயிற்றுனர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஒரு பெயிண்டர். ஒரு கம்மியர் மோட்டார் வாகனம். 2 ஓயர் மேன் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதி,விருப்பம் உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு 40க்குள் இருக்க வேண்டும். முன்னுரி மையற்ற பொது பிரிவினரும் விண்ணப்பிக்கலாம். மாதச்சம்பளம் 20 ஆயிரம் வழங்கப்படும்.
பெயிண்டர் தொழில்பிரிவில் பெயிண்ட்டெக்னாலஜியில் பட்டம் அல் லது அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் நுண் கலைகளில் இளங்கலை பட்டம் மற்றும் ஓராண்டும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது பெயிண்ட் டெக்னாலஜியில் பட்டயம் பெற்று 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், எம்பிடி சாலை, ஐவிபிஎம் எதிரில், ராணிப்பேட்டை என்கிற முகவரிக்கு வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.