Tanker truck collision kills woman In Nellikuppam
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அடுத்த கத்தாரி குப்பம் பகுதியை சேர்ந்தவர் அம்சா (வயது 60). கட்டிட வேலை பார்த்து வந்தார். அம்சா தனது கணவர் பரசுராமனுடன் மோட்டார் சைக்கிளில் கத்தாரிகுப்பத்தில் இருந்து லாலாபேட்டை நோக்கி சென்றுள்ளார். நெல்லிக்குப்பம் அருகே சென்றபோது செந்தில் குமார் என்பவர் ஓட்டி வந்த டேங்கர் லாரி, பரசுராமனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்து சென்ற அம்சா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கணவன் கண்முன்னே இறந்தார். பரசுராமன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பிணத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.