ஆற்காடு அருகே பெண் சத்துணவு அமைப்பாளரை மாற்றக்கோரி மாணவர்கள். பெற்றோர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புங்கனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளி தலைமை ஆசிரியராக கிருஷ்ண மூர்த்தி பணியாற்றி வருகிறார். சத்துணவு அமைப்பாளராக போது மணி பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சத்துணவு அமைப்பாளர் போதுமணி, மாணவ, மாணவிகளுக்கு சரியான முறையில் சத்துணவு, முட்டை, காய்கறிகள் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோரை திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவர், அமைப்பாளர் போதும்ணியிடம் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த போதுமணி. தலைமை ஆசிரியரை மீது அதிகாரிகளிடம் அவதூறான புகார் அளித்தாராம். ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை புங்கனூர்- பாலமதி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த திமிரி, ஆற்காடு, வேலூர் செல்லும் 5 அரசு டவுன் பஸ்களை சிறைபிடித்தனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் அம்பேத்கர், திமிரி ஆர்ஐ ரகு, விஏஓ சரவணன் திமிரி, எஸ்ஐ சிவாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள், 'அமைப்பாளரை மாற்றினால்தான் போராட்டத்தை கைவிடுவோம்" என வாக்குவாதம் செய்தனர்.
இது குறித்து சம்பந் தப்பட்ட மேலதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள். போலீசார் கூறினர். இதனை ஏற்றுக் கொண்ட மாணவர்கள், பெற்றோர். மறியலை கைவிட்டு பஸ்களை விடுவித்தனர். மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு சென்றனர். இதன் காரணமாக, அங்கு சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.