Social activist who opened an account by paying 250 rupees free to each bank under the Selva Magal Savings Scheme in Ranipet !


மகளிர் தினத்தை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்டம் தென்கடப்பந்தங்கால் கிராமத்தில் அஞ்சல் துறையின் கீழ் 50 பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் தலா 250 ரூபாய் இலவசமாக வங்கியில் செலுத்தி கணக்கு துவக்கி கொடுக்கப்பட்டது. 
நிகழ்ச்சியில் அஞ்சல் துறை கோட்ட கண்காணிப்பாளர் திரு. சிவசங்கர் அவர்களுடன் இணைந்து குழந்தைகளுக்கு திட்டம் தொடங்கிய ஆவணம் வழங்கப்பட்டது. துணை கண்காணிப்பாளர், ஊர் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குழந்தைகளுடன் மரக்கன்றுகள் நட்டு, இன்று செடி நாளை மரமாவது போல சிறு தொகை பெரியதாக மாற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.