Liquor prices rise sharply from today


ஷாக்! இன்று முதல் மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இது தொடர்பாக கடந்த 5ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.  கேபினட் அமைச்சரவை கூட்டத்தில் மதுவிலக்கு ஆயதீர்வை வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 

அதன்படி மதுபானங்களுக்கு குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.10, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.20, ஆஃப் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.20, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.40,  புல் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.40, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.80 வரையும் விலை உயர்த்த பட்டுள்ளது

பீர் வகைகளுக்கு ரூ.10  விலை உயர்ந்த பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ 10.35 கோடி கூடுதல் வருவாயும் ஆண்டுக்கு 4396 கோடி கூடுதல் வருவாயும் வர வாய்ப்புள்ளது. இன்று காலை 12 மணியளவில் கடை திறந்தவுடன் புதிய விலை பட்டியல் படி விற்பனை செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.